இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1,008 பேர் பலி!

Share this News:

புதுடெல்லி (03 பிப் 2022): இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 1008 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,72,433 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் 1,61,386 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், பாதிப்பு இன்று சற்று அதிகரித்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தினசரி கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் குறைந்துவரும் நிலையில், இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நேற்றை விட இன்று 6.8% அதிகரித்திருக்கிறது.

கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை உயர்ந்தும் வருகிறது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,59,107 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 3,97,70,414 என்றாகியுள்ளது.

மேலும் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 15,33,921 என குறைந்துள்ளது. இது நேற்று 16,21,603 என்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்புடன் சேர்த்து, இதுவரை இந்தியாவில் கொரோனா உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,18,03,318 என உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 95.14% என்றும், சிகிச்சையிலிருப்போர் விகிதம் 3.67% என்றும் உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா உறுதியாவோரின் எண்ணிக்கை விகிதம், 10.99% என்றாகியுள்ளது. நேற்றைய தினம் 9.26% என்றிருந்தது.

கொரோனா உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 1,733 பேர் உயிரிழந்த நிலையில் இன்று அது சற்று குறைந்திருக்கிறது. இறப்பு விகிதம் 1.19% என்றுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,98,983 என்று உயர்ந்துள்ளது.


Share this News:

Leave a Reply