இந்தியாவில் புதிய மாறுபாடு கொரோனா பாதிப்பு – விமான நிலையங்களில் மீண்டும் கோவிட் பரிசோதனை!

Share this News:

புதுடெல்லி (21 டிச 2022): சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு தொற்று கண்டுடறியப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கோவிட் பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது விமான சேவைக்கு எந்த தடையும் இல்லை.

இதற்கிடையே சீனாவில் தற்போது பரவி வரும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று நோய் முந்தைய அலைகளை விட அதிவேகம் கொண்டுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்குள் இந்த வைரஸ் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் தினமும் 200 உடல்கள் மேல் நிரம்பி வழிகின்றன.


Share this News:

Leave a Reply