அலகாபாத் (26 அக் 2020): உத்திர பிரதேசத்தில் பசுவதை சட்டம் அப்பாவி மக்கள் மீது தவறாக பயன்படுத்தப்படுவதாக அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ரஹிமுதீனின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அலகாபாத் நீதிமன்றம் இதனை தெரிவித்தது.
மேலும் “இந்த சட்டம் அப்பாவி மக்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இது தடயவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, அது மாட்டிறைச்சி என்ற முடிவுக்கு போலீசார் வருகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளை பரிசோதனைக்கு அனுப்பப்படுவதில்லை. இச்சட்டத்தால் பலர் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார்கள், ”என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் விபத்துக்களுக்கு வழிவகுக்கிறது. என்றும் நீதிபதி தெரிவித்தார்.