போபால் (05 ஜூலை 2022): மத்திய பிரதேசத்தில் பசு பாதுகாப்பு பயங்கரவாதிகளால் 50 வயது முஸ்லீம் படுகொலை செய்துள்ளனர்.
தி வயர் செய்தியின்படி, மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டம் பிரகாத் கிராமத்திற்கு அருகே ஆகஸ்ட் 2ஆம் தேதி,
50 வயது நசீர் அகமது – 40 வயதான சையத் முஷ்டாக் மற்றும் 38 வயதான ஷேக் லாலாவுடன் நள்ளிரவில் மாடுகளுடன் அமராவதி விலங்குகள் கண்காட்சிக்கு விற்பதற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பசு பாதுகாப்பு பயங்கரவாத கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தி கத்தி மற்றும் கம்புகளால் சரமாரியாக தாக்கியது. மாடுகளை அமராவதிக்கு விலங்குகள் கண்காட்சியில் விற்க மட்டுமே அழைத்துச் செல்கிறோம் என்று மூவரும் கூறியும் அந்த பயங்கரவாத கும்பல் கேட்கவில்லை. அவர்களை தாக்கிவிட்டு கும்பல் தப்பிவிட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பசீர் அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முஷ்டாக் மற்றும் லாலா ஆகியோருக்கும் படு காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஷ்தாக், “நாங்கள் 8 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து வந்தபோது அங்கு தடி மற்றும் ஆயுதங்களுடன் வந்த கும்பல் எங்கள் சாலையை மறித்து, லாரியில் இருந்து வெளியே வருமாறு வற்புறுத்தி, எதையும் விசாரிக்காமல் எங்களைத் தாக்கினர். இந்த தாக்குதலில் பசீர்அகமது பரிதாபமாக உயிரிழமந்தார்.” என்றார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அடையாளம் தெரியாத12 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.