காமென்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீனுக்கு தங்கம்!

Share this News:

பிர்மிங்காம்(08 ஜூலை 2022);: உலக சாம்பியனான நிகத் ஜரீன், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவுக்கான குத்துசண்டை போட்டியின் இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

26 வயதான இந்திய வீரர் நிகாத் ஜரீன், 33 வயது அயர்லாந்தின் கார்லி மெக்னாலை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.

ஆரம்பத்தில் போட்டி கடுமையாக இருந்தது. எனினும் அடுத்தடுத்த சுற்றுகளில் திறமையாக செயல்பட்டு ஜரீன் தங்கம் வென்றார்.

ஜரீனுக்கு பாராட்டுகள் குவிக்கின்றன.


Share this News:

Leave a Reply