டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு!

Share this News:

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றினர். இதனால் டெல்லி போர்க்களமானது. பலரது வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 44 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலு 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Share this News:

Leave a Reply