டெல்லியில் தொடரும் வன்முறை காரணமாக 9 பேர் பலி!

Share this News:

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் தொடரும் வன்முறை காரணமாக இதுவரை 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது.

இந்நிலையில் இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 135 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலருக்கு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply