மஹாவீர் அகாரா பேரணியில் முஸ்லிம்கள் வீடுகள், மசூதிகள் மீது குறிவைத்து தாக்குதல்!

பாட்னா (11 செப் 2022): பிகாரில் மஹாவீர் அகாரா பேரணியின் போது இந்துத்துவா வன்முறை கும்பலால் முஸ்லிம்கள் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளன. பீகாரின் சிவான் மாவட்டம் பர்ஹாரியாவில் நடந்த மஹாவீர் அகாரா பேரணியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.வன்முறையின்போது முஸ்லிம்கள் வீடுகள், மற்றும் மசூதிகள் மீது வன்முறையாளர்கள் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் . மேலும் பல வீடுகளில் கொள்ளை நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வீடுகளும் கடைகளும்…

மேலும்...

டெல்லி கலவரம் – கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தியையொட்டி கலவரம் வெடித்ததாகக் கூறப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க என்டிஎம்சி இடிப்பு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதனை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, கபில் சிபல், பி.வி.சுரேந்திரநாத் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற பார்வைக்குக் கொண்டு சென்றனர். இதன் பேரில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முன்னதாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில்…

மேலும்...

மத்திய பிரதேசம் கலவரம் – இப்ரீஸ் கான் மரணத்தை உறுதி செய்தது காவல்துறை!

கார்கோன் (18 ஏப் 2022): மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏற்பட்ட ராமநவமி கலவரத்தை அடுத்து கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த இப்ரீஸ் கானின் மரணத்தை கார்கோன் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி காணாமல் போன ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். எனினும் காவல்துறை இப்ரீஸ் மரணத்தை அறிவிக்காமல் இருந்தது. சம்பவம் குறித்து இப்ரீஸின் சகோதரர் இக்லாக் கூறுகையில், நானும் எனது சகோதரர் இப்ரீஸும் இப்தார் நோன்பு துறப்புக்காக மசூதிக்குச் சென்று திரும்பி…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான சமூகவலைத்தள பதிவு – கர்நாடகாவில் வெடித்த வன்முறை!

ஹூப்பள்ளி (17 ஏப் 2022): கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவிட்ட நிலையில் இதற்கு எதிராக காவல்துறை சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி காவல்நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தினரை இழிவுபடுத்தி பதிவிட்டதை அடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைதான அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் பழைய ஹூப்ளி காவல்…

மேலும்...

ராமநவமி கலவரம் – 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறை கொடூர தாக்குதல் – வீடியோ!

கார்கோன் (12 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறையினர் கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தால் ஏற்பட்ட வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரமான கார்கோனில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட பிறகும், காவல்துறை அதிகாரிகள் ஏப்ரல் 11 அதிகாலை பிலால் மசூதியின் கதவுகளை உடைத்து நுழைந்து அங்கிருந்தவர்களிடம் பயத்தின் சூழலை உருவாக்கியுள்ளனர். மசூதியின் எதிரில் இருந்த வீட்டிற்குள்…

மேலும்...

உத்திர பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் பலி!

லக்னோ (04 அக் 2021): உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பத்து மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூர் மாவட்டத்திலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலுள்ள பன்வீர்பூர்…

மேலும்...

டெல்லி கலவரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட 85 வயது மூதாட்டி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் 85 வயது முஸ்லிம் மூதாட்டி அவரது வீட்டில் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதனை அடுத்து வன்முறையாளர்கள் முஸ்லிம் வீடுகள்,…

மேலும்...

டெல்லி மசூதியை அடித்து நொறுக்கும் வன்முறையாளர்கள் – வீடியோ!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையின்போது மசூதி மீது தீ வைத்ததோடு, மசூதியை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர் வன்முறையாளர்கள். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வன்முறையாளர்கள் மசூதி…

மேலும்...

டெல்லி கலவரத்தை தூண்டிய பாஜக தலைவர் மீதான விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி கலவரத்தை தூண்டியதாக பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதனன்று விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில்…

மேலும்...

டெல்லியில் தொடரும் வன்முறை காரணமாக 9 பேர் பலி!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் தொடரும் வன்முறை காரணமாக இதுவரை 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்நிலையில் இந்த…

மேலும்...