ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த எதிர் பாராத ஆதரவு – வீடியோ!

Share this News:

புதுடெல்லி (08 ஜன 2020): ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே ஆதரவளித்துள்ளார்.

ஜேஎன்யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட முகமூடி அணிந்திருந்த மர்ம கும்பலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தக் கூட்டதத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் சீதாராம் யெச்சூரி, கண்ணையா குமார், டி. ராஜா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுதவிர பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதில் பங்கேற்றார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷையும் அவர் சந்தித்தார்.


Share this News:

Leave a Reply