புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளதாக உடற்கூறு ஆய்வு சான்றளித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். இவர் கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர்.
முதலில் அவர் கல்லால் அடித்து கொல்லப் பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் உடற்கூறு ஆய்வு தகவல் அவர் சுடப்பட்டு இறந்ததாக சான்றளித்துள்ளது.
இதுவரை டெல்லி வன்முறைக்கு 23 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.