ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை மாற்ற முடியுமா? – திக் விஜய் சிங் சரமாரி கேள்வி!

Share this News:

புதுடெல்லி (06 அக 2022): ஆர் எஸ். எஸ் தனது கொள்கைகளை மாற்ற முடியுமா? என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாக்பூர் தசரா விழாவின்போது மோகன் பகவத் ஆற்றிய தனது உரையில் பெண்களை சமமாக நடத்த வேண்டும் என்றும் வீட்டிற்குள் அடைத்து வைக்கக்கூடாது என்றும் கூறினார். இந்த முறை நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த விஜயதசமி கொண்டாட்டத்தில் ஒரு பெண் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். எவரெஸ்ட் சிகரத்தை வென்ற முதல் பெண்மணி சந்தோஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திக் விஜய் சிங் ஆர்எஸ்எஸ் மாறி வருகிறதா?அந்த அமைப்பு அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகத் தொடங்குகிறதா? என்று திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.


Share this News:

Leave a Reply