மும்பை (07 அக் 2022): முதியவர்களை கட்டிப்பிடித்து செல்போன்கள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிய இளம் பெண் கீதா படேல் என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பையில் 72 வயதான முதியவர் ஷாப்பிங் முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது. கீதா ஆட்டோவை நிறுத்திவிட்டு லிப்ட் கேட்டாள். பின்னர் அந்த இளம் பெண் ஆட்டோவை ஒரு கட்டிடத்தின் முன் நிறுத்தச் சொல்லி முதியவரைக் கட்டித் தழுவி நன்றி செலுத்தினார்.
முதியவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கழுத்தில் இருந்த தங்க செயினை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது. பின்னர், மலாட் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். சீனியர் இன்ஸ்பெக்டர் ரவி அதானே தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில்,திருட்டில் ஈடுபட்ட கீதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கீதா இதுபோன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிதா பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.