ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23.
கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின் என்பவர் ஜோர்டானிலிருந்து ஜிசான் செல்லும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். சடலம் அல் லெய்த் அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் பற்றி அறிந்ததும் அவரது கணவர் ஜிசானிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.