புதுடெல்லி (06 ஜன 2023): டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்த உயிரிழப்பு அல்லது பிற விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. ஐந்து நாட்களில் டெல்லியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.