இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

ஜகார்த்தா (10 பிப் 2023): இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்...

துருக்கி பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 21 ஆயிரத்தை தாண்டியது!

இஸ்தான்பூல் (10 பிப் 2023): துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம்…

மேலும்...

அதிர்ந்தது துபாய் – நடந்தது என்ன?

துபாய் (23 ஜன 2023): துபாய் மீடியா சிட்டி மக்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல் பல அதிர்வுகளை உணர்ந்தனர். என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில், “நில அதிர்வு எதுவும் ஏற்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பினர். மேலும் ஊடகங்களையும் ஆய்வு செய்தனர். எதிலும் நில அதிர்வு அல்லது பூகம்பம் குறித்து தகவல் இல்லை. மிகுந்த குழப்பத்துக்கிடையே ‘TimeOut Dubai’ என்ற இணையதளம் அது பூகம்பம் அல்ல என்பதை உறுதி செய்தது. மேலும் துபாய்…

மேலும்...

வட இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 என பதிவு!

புதுடெல்லி (06 ஜன 2023): டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்பு அல்லது பிற விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. ஐந்து நாட்களில் டெல்லியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஏற்கனவே…

மேலும்...

வளைகுடா நாடுகளை அதிர வைத்த திடீர் நில நடுக்கம்!

துபாய்(02ஜூலை 2022):ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, பந்தர் கமீர் அருகே அதிகாலை 1.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த நில நடுக்கம் ஐக்கிய அரபு அமிரகத்திலும் உணரப்பட்டது. துபாய், ஷார்ஜா, உம்முல் குவைன் மற்றும் அஜ்மான் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக…

மேலும்...

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நில நடுக்கம்!

தெஹ்ரான் (25 ஜூன் 20222): ஈரானின் தெற்கு வளைகுடா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அதேபோல பல ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள் சனிக்கிழமை காலை நடுக்கத்தை அனுபவித்ததாக தெரிவொத்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையமும் (NCM) நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ட்வீட் செய்துள்ளது

மேலும்...

ஆப்கானிஸ்தான் நில நடுக்கம் – பலி எண்ணிக்கை 1150 ஆக உயர்வு!

காபூல் (25 ஜூன் 2922): ஆப்கானிஸ்தானில் கடந்த 22ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,150 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகளை செய்ய முடியாமல் திணறி வருவதால், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கான் பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள பாக்டிகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில், ரிக்டர் அளவில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. பாக்டிகா மாகாணத்தில் கடும் சேதம் ஏற்பட்டுஉள்ளது. இது, மலைப்பகுதி என்பதால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள்…

மேலும்...

வேலூரில் நிலநடுக்கம்!

வேலூர் (29 ஆஆ 2021): வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால்…

மேலும்...

சென்னையில் நில நடுக்கம்!

சென்னை (24 ஆக 2021): வங்கக்கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீட்டர் கிழக்கு திசையில் வங்கக் கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னை அடையாறு, திருவான்மியூர், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும்...