கோழிக்கோடு (11 ஜூலை 2021): கேரளா மாநிலத்தில் வரும் ஜூலை 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து கோழிக்கோடு தலைமை காஜி முகமது கோயா தங்கல் தெரிவிக்கையில், நாளை (12-07-2021) கேரளாவில், முதல் துல்-ஹஜ் பிறை 1 என்றும், எதிர்வரும் 21-07-2021 (புதன்கிழமை) அன்று கேரளாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படும் எனவும் தெரிவித்தார்.
பனக்காடு சையத் ஹைதராலி ஷிஹாப் தங்கல், சமஸ்தா தலைவர் ஜிஃப்ரி முத்துகோய தங்கல் மற்றும் கேரள ஹிலால் கமிட்டி தலைவர் எம் முஹம்மது மதானி ஆகியோரும் இதனை உறுதிப் படுத்தியுள்ளனர்.