மும்பை (11 ஜூலை 2021): மகாராஷ்டிராவின் ப்ரீதம் முண்டேவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதினான்கு பாஜக அலுவலக பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பில் பாஜக எம்.பியும் மறைந்த கோபிநாத் முண்டேவின் மகளுமான ப்ரீதம் முண்டே-விற்கும் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
“எங்கள் தலைவர் மதிக்கப்படாத இடத்தில் அந்த கட்சியில் நீடிப்பதன் அர்த்தம் என்ன?” என்பதாக கட்சியிலிருந்து இதுவரை விலகியவர்கள் தெரிவித்துள்ளனர்.
ப்ரிதம் முண்டே அமைச்சரவை பதவி பெறுவார் என அவரது ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.
ப்ரீதம் சகோதரி பங்கஜ முண்டேவும் ப்ரீதம் முண்டேவிற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்தவர்களில் ஒருவர்.
தற்போது அவரும் அதிருப்தியில் இருப்பதால் சகோதரிகள் இருவரும் பாஜக-விலிருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இது பாஜகவுக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.