பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டதா?

Share this News:

புனே (25 செப் 2022): மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமையன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியினர் தேசிய புலனாய்வு தலைமையிலான பல அமைப்புகளின் பாரிய அடக்குமுறைக்கு எதிராக திரண்டிருந்தபோது, ​​’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்கள் கேட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டுள்ள ANI, அதிக சுற்றுப்புற இரைச்சல் காரணமாக ஸ்லோகங்களின் சில பகுதிகள் மங்கலாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

கோஷம் எழுப்பப்பட்ட சம்பவத்திற்கு பதிலளித்த மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர், இவ்விரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பாரதிய ஜனதா எம்எல்ஏ நித்தேஷ் ரானே ட்விட்டரில் இதுபோன்ற கோஷங்களை எழுப்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் PFI ஐ தடை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்நிலையில் நியூஸ் லாண்ட்ரியின் உண்மைச் சரிபார்ப்பின்படி, அத்தகைய கோஷங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது. அதில், ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஜிந்தாபாத்’ கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து , மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பண்ட் கார்டன், பிரதாப் மான்கர் கூறுகையில், ‘பாகிஸ்தான் சார்பு கோஷங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை, அவர்களின் கோஷங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஜிந்தாபாத்’ என்று மட்டுமே இருந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த இடத்தில் இருந்த போராட்டக்காரர்களில் சிலர், பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எதையும் தாங்கள் கேட்கவில்லை என்றும், அவர்களில் பலர் பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதாகவும் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply