கோவை (25 செப் 2022): தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பா.ஜ. க, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு காரணமாக கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நேற்று இரண்டாவது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
இதன் காரணமாக கோவை நகரின் பல்வேறு நுழைவு வாயில்களில் 11 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது