தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டதா? -உண்மை தகவல் என்ன?

Share this News:

புதுடெல்லி (14 ஜன 2023): ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், ஆஸ்கார் 2023 விருதுகளுக்கான 10 பிரிவுகளில் எதற்கும் படம் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உண்மை கண்டறியும் ALT நியூஸ் உறுதிபடுத்தியுள்ளது.

95வது அகாடமி விருதுகளுக்குத் தகுதியான திரைப்படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில் இந்திய திரைப்படங்களான ஆர்ஆர்ஆர், காந்தாரா, தி காஷ்மீர் ஃபைல்ஸ், கங்குபாய் கதியாவதி, மீ வசந்தராவ், துஜ்யா சதி கஹி ஹி, ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட், தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ, விக்ராந்த் ரோனா, இரவின் நிழல் போன்றவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றன. மற்ற நாடுகளின் படங்களுடன் மொத்தம் 301 திரைப்படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஆஸ்கார் விருதுக்கு விண்ணப்பித்த படங்களாகும்.

இந்நிலையில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத் தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான அகாடமியின் இறுதி பட்டியலில் தனது திரைப்படம் ஷார்ட்லிஸ்ட்” செய்யப்பட்ட செய்தியைப் பகிர்ந்து ட்வீட் செய்தார். கூடுதலாக, பட்டியலில் பெயரிடப்பட்ட ஐந்து இந்தியத் திரைப்படங்களில் தி காஷ்மீர் கோப்புகளும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ட்வீட்டில், நடிகர்கள் பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர் மற்றும் தர்ஷன் குமார் ஆகியோரும் சிறந்த நடிகர் பிரிவில் ‘ஷார்ட்லிஸ்ட்’ செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

இது இப்படியிருக்க உண்மையை கண்டறியும், Alt News இன் விரிவான அறிக்கையின்படி, காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 10 வகைகளுக்கான எந்த ஒரு தேர்வுப்பட்டியலிலும் இடம் பெறவில்லை. என செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல காந்தாரா திரைப்படமும் எந்த பட்டியலிலும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து , Alt News ஈமெயில் மூலம் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள விருதுகள் நிர்வாகத்தின் மூத்த மேலாளர் மைக்கேல் பெனடிக்ட், “விண்ணப்பித்த படங்களின் பட்டியல் மட்டுமே முதலில் இடம்பெற்றன. ஆனால் இறுதிப் பட்டியலில் ‘தி காஷ்மீர் ஃபைல்’ திரைப்படம் இடம்பெறவில்லை என பதிலளித்துள்ளார்.


Share this News:

Leave a Reply