பெங்களூரு (07 ஏப் 2020): “தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து பாஜக எம்பி வெளியிட்ட தகவல் பொய்யானது.” என்று துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு நாடெங்கும் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். அதில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் அளிக்கப் பட்டு வருகின்றன.
இதற்கிடையே தப்லீக் ஜமாஅத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
நேற்று கர்நாடக மாநிலம் பெகாலி மருத்துவமனை ஊழியர்களிடம் அங்கு தனிமை வார்டில் இருந்த தப்லீக் ஜமாஅத்தினர் தவறாக நடந்து கொண்டதாகவும், சிலர் சுகாதாரமின்றி நடந்து கொள்வதாகவும் பாஜக எம்பி ஷோபா கரண்ட்லாஜே சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அது வைரலாக பரவியது.
இந்நிலையில் ஷோபா கரண்லாஜேவின் பதிவு பொய்யானது என்று பெலகாவி துணை ஆணையர் எஸ்பி பொம்மன ஹள்ளி தெரிவித்துள்ளார். மேலும் “தப்லீக் ஜமாஅத்தினர் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை அது முற்றிலும் பொய்யானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.