இந்தியாவின் முடிவில் திடீர் மாற்றம்!

Share this News:

புதுடெல்லி (07 ஏப் 2020): அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்ற மோடி அரசு உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அந்த மருந்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவ்வாறு இந்தியா மருந்தை அனுப்பாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா நோயாளிகளிடம் கொடுத்தபோது, அவா்களிடம் முன்னேற்றம் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தடை விதித்தது. தற்போது அந்த தடையை நீக்க முடிவு செய்துள்ளது.


Share this News:

Leave a Reply