மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையின்போது அசத்திய விவசாயிகள்!

Share this News:

புதுடெல்லி (05 டிச 2020): விவசாயிகள் அரசுடன் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது சொந்த உணவை கொண்டு வந்ததோடு அரசு ஏற்பாடு செய்த உணவையும் நிராகரித்தனர்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சனிக்கிழமையன்று ஐந்தாவது முறையாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது சொந்த தேநீர் மற்றும் உணவைக் கொண்டு வந்தனர்.

ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது, இதில் பல்வேறு உழவர் அமைப்புகளின் 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத் தளமான விஜியன் பவனில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதைக் காட்டிலும், இடைவேளையின் போது தங்களுக்கு சொந்தமான உணவு மற்றும் தேநீர் இருப்பதாக யூனியன் தலைவர்கள் தெரிவித்தனர்.

விவசாய தலைவர்கள் முன்னதாக வியாழக்கிழமை அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அரசு வழங்கிய உணவை நிராகரித்ததோடு உணவை வழங்குவதன் மூலம் விருந்தளித்து உபரசரிப்பதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. .


Share this News:

Leave a Reply