சென்னை (06 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்வீட்டர் பதிவில், “நீர் பற்றாக்குறை மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக விவசாயிகள் பாதிப்படைவது ஒருபுறம் என்றால், இதுபோன்ற சட்டங்களாலும் விவசாயிகள் பாதிக்கபப்டுகின்றனர். என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் “விவசாய மசோதாவை எதிர்த்து விவசாயிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றை அடையாளமாக அவர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக அணிவகுத்துள்ளனர்.” என்று கார்த்தி கூறியுள்ளார்..
மேலும் “வேலை இல்லாமல் ஒரு நாளை கூட நகர்த்த முடியாத மக்கள் தங்களின் சொத்துக்கள், விளைநிலங்கள், பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை விட்டுவிட்டு டெல்லியில் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். கடுமையான குளிர் மற்றும் கோவிட் பயம் இருந்தபோதிலும் அவர்கள் ஒரு வாரமாக தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பது அவர்களின் எந்த அளவுக்கு நியாயமானது? என்பதை நாம் உணர வேண்டும்.” என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.