புதுடெல்லி (27 நவ 2020): வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி-யில் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும் மத்திய அரசு சட்டத்தை வாபஸ் பெறவில்லை.
இதனை அடுத்து நேற்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஹரியானா எல்லையில் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கு எதிராக போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாலத்தில் அமைக்கப்பட்ட போலீஸ் தடுப்புகளை ஆற்றில் வீசினர்.
இதற்கிடையே, எதிர்வரும் டிசம்பர் 3-ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“டெல்லி சாலோ” என்ற முழக்கத்துடன் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட முயன்று வருகின்றனர். விவசாயிகளின் பேரணி டெல்லியை வந்தால் வன்முறை வெடிக்கலாம் என்பதால் எல்லை மூடப்பட்டுள்ளது. எல்லையில் பலத்த பாதுகாப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி பரபரப்பு அடைந்துள்ளது.