துபாய் (27 நவ 2020): ஐக்கிய அரபு எமிரேட் டிசம்பர் 2 தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 472 கைதிகளை விடுவிப்பதாக துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் சயீத் அல் காசிமி, சிறைகளில் இருந்து 219 கைதிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளார். வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு முழு ஆதரவையும் தருவதாக ராஸ் அல் கைமா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 628 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டார். மேலும் போக்குவரத்து அபராதங்களை 50 சதவீதம் குறைக்க ஷார்ஜாவும் முடிவு செய்துள்ளது. இந்த விலக்கு டிசம்பர் 2 முதல் 49 நாட்களுக்கு தொடரும். . வாகனங்கள் பறிமுதல் செய்வதும் தவிர்க்கப்படும். இருப்பினும், கடுமையான போக்குவரத்து குற்றங்களுக்கு இந்த விலக்கு இருக்காது.
முன்னதாக, ராஸ் அல் கைமா, அஜ்மான் மற்றும் புஜைரா ஆகிய பகுதிகளீல் அபராதம் 50 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.