மீண்டும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

Share this News:

புதுடெல்லி (27 நவ 2022): நாட்டில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் நேற்று ராஜ்பவனுக்கு விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர். ஆதரவு விலை உள்ளிட்ட விவகாரங்களில் அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு மீறுவதாக வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டத்தின் தொடக்கமாக நேற்றைய போராட்டமாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடன் தள்ளுபடி, லக்கிம்பூர் விவசாயிகளின் மரணத்துக்கு காரணமான அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர். மார்ச் இறுதிக்குள் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply