லண்டன் (27 நவ 2022): இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் லண்டனில் குச்சிப்புடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
9 வயதான அனுஷ்கா சுனக் லண்டனில் ‘ராங் சர்வதேச குச்சிப்புடி நடன விழா 2022’ வின் ஒரு பகுதியாக இதில் கலந்துகொண்டு நடனமாடினார்.
இசைக்கலைஞர்கள், சமகால நடனக் கலைஞர்கள் (65 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள்), மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் உட்பட 4 முதல் 85 வயதுக்குட்பட்ட 100 கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சுனக்கின் மகள் ஆடிய நடனத்தின் படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் அனுஷ்காவின் தாய் அக்ஷதா மூர்த்தி மற்றும் ரிஷி சுனக்கின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.