ஐதராபாத் (30 மே 2020): பெற்ற 13 வயது மகளையே வன்புணர்ந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதிலும் தந்தையே மகளை வன்புணரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் விகராபாத் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 46 வயதான ஒருவர் வீட்டில் தனியாக இருந்த தனது 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வெட்கக்கேடான சம்பவத்தை செய்த தந்தை, இதை யாரிடமும் கூறக்கூடாது என்றும் மீறினால் விபரீதத்தை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளான். எனினும் சம்பவத்தை பாட்டியிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.