அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் – காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு!

Share this News:

நியூயார்க் (30 மே 2020): கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்ததை அடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார். ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் உயிரிழந்தாக கூறி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

போலீஸ் வாகனங்கள், வங்கிகள், உணவகங்கள், காவல்நிலையம் என பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். வாஷிங்க்டன், ஜியார்ஜியா,நியுயார்க்,புளோரிடா, டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரணத்தில் தொடர்புடைய முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி மீது மூன்றாம் நிலை கொலை மற்றும் படுகொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதனால் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.


Share this News: