டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ!

Share this News:

புதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் யாருக்கும் காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது விபத்தா? அல்லது வேறு எதுவும் சதியா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் சூழலில், டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply