மத்திய பிரதேசம் கலவரம் – இப்ரீஸ் கான் மரணத்தை உறுதி செய்தது காவல்துறை!

Share this News:

கார்கோன் (18 ஏப் 2022): மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏற்பட்ட ராமநவமி கலவரத்தை அடுத்து கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த இப்ரீஸ் கானின் மரணத்தை கார்கோன் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி காணாமல் போன ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். எனினும் காவல்துறை இப்ரீஸ் மரணத்தை அறிவிக்காமல் இருந்தது.

சம்பவம் குறித்து இப்ரீஸின் சகோதரர் இக்லாக் கூறுகையில், நானும் எனது சகோதரர் இப்ரீஸும் இப்தார் நோன்பு துறப்புக்காக மசூதிக்குச் சென்று திரும்பி வரும்போது வாள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டோம். இதில் இப்ரீஸ் உயிரிழந்தார். எனினும் அவரது மரணத்தை எட்டு நாட்களுக்கு காவல்துறையினர் ரகசியமாக வைத்திருந்தனர்” என்று கூறினார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இப்ரீஸின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்ரீஸ் தனது மனைவி மற்றும் எட்டு மாத குழந்தையுடன் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply