திருவனந்தபுரம் (08 மார்ச் 2020): கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய 3பேர் உட்பட பத்தினம் திட்டாவை சேர்ந்த 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஏற்கெனவே 3 பேருக்கு கரோனா உள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
இத்துடன் சேர்த்து நாட்டில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது 39-ஆக உள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், கேரளத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
கரோனா பாதிப்புள்ள 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.