புதுடெல்லி (30 ஏப் 2020): கொரோனா பாதித்தவர்களின் சிகிச்சைக்கு உதவும் விதமாக வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினரும் தங்களது பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதில் சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக உயிரிழப்புகளையும் இந்நாட்டுகள் சந்தித்துள்ளன. மேலும் இந்தியாவிலும் அதிக அளவில் கொரோனா பரவிவருகிறது.
இது இப்படியிருக்க இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினரும், ஊடகங்களும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன.
ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தப்லீக் ஜமாஅத்தினருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாதது பெரிய ஆச்சர்யம். இது இப்படியிருக்க கொரோனாவிலிருந்து மீண்ட தப்லீக் ஜமாஅத்தினர், கொரோனா பாதித்து உயிருக்கு போராடி வருபவர்களுக்காக தங்களது பிளாஸ்மாவை தானமாக கொடுக்க முன் வந்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த தப்லீக் ஜமாஅத்தினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து வந்த தப்லீக் ஜமாஅத்தினரும் தங்களது பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்து, பொய் தகவல் பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
மலேசியா, அல்ஜீரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களது பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.