ஸ்ரீநகர் (24 மார்ச் 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்ய உத்தரவு.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஒமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அவரது சகோதரி சாரா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒமர் அப்துல்லா விடுதலை குறித்து மத்திய அரசும், யூனியன் பிரதேச நிர்வாகமும் தங்கள் முடிவை அடுத்த வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து, ஒமர் அப்துல்லா மீது போடப்பட்டிருந்த பொது பாதுகாப்பு சட்டம் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று(மார்ச் 24) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.