மும்பை (26 மே 2020): இந்தியாவில் இந்துத்வாவினரை வளர்த்துவிட்டதே முஸ்லிம்கள்தான் என்று முன்னாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கோல்ஸே பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சாதிய அடிப்படையில் இந்துக்களை நசுக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களை பகடைக்காயாக பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்த நீதிபதி கோல்ஸே பாட்டீல், “இந்தியாவில் தங்களை உயர்வானவர்களாகவும் மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் காட்டிக் கொண்டவர்கள் சாவர்க்கர் மற்றும் கோல்வர்கர். இவர்கள் இந்தியாவின் அரசியலமைப்பில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்ட சமத்துவத்தை ஏற்கவில்லை. இதற்காக முஸ்லிம்களை உபயோகப்படுத்தி இந்துக்களை நசுக்கினர். அவர்கள் வழியிலேயே இன்றும் அது தொடர்கிறது” என்றார்.
மேலும் இந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆனால் இந்துத்வாவினர் இஸ்லாமிய எதிர்ப்பை காட்டுவதற்கு பலவகைகளில் முஸ்லிம்களே வாய்ப்பளிக்கின்றனர். அதற்கு எவ்வகையிலும் முஸ்லிம்கள் வாய்ப்பளிக்கக் கூடாது. என்றும் அவர் தெரிவித்தார்.
இந்துத்வாவினரை எதிர் கொள்ள வேண்டுமெனில் முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், ஆதிவாசிகள் என அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம் என்றும் கோல்ஸே பாட்டில் தெரிவித்தார்.