கையில் பணமில்லை – பகீர் கிளப்பும் முன்னாள் பிரதமர்!

Share this News:

பெங்களூர் (11 பிப் 2021): : தேர்தல் செலவினங்களுக்கு பணம் இல்லாததால் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஜே.டி (எஸ்) போட்டியிடாது என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெல்காம் மக்களவைத் தொகுதி மற்றும் பசவகல்யன், சிண்ட்கி மற்றும் மஸ்கி சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும். இடை தேர்தல் குறித்து அவர் தெரிவிக்கையில், “இப்போதைக்கு இடைதேர்தல் குறித்து சிந்திக்கப்போவதில்லை. அதற்கு செலவு செய்ய பணமும் இல்லை. 2023 தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தேவ கவுடா பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பாஜகவை வெற்றி அடைய செய்வதற்காக தேர்தலிலிருந்து விலகுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Share this News:

Leave a Reply