லக்னோ (04 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய முன்னாள் கவர்னர் அஜிஸ் குரோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காங். மூத்த தலைவரும், உ.பி. உத்தர்காண்ட் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கவர்னராக இருந்தவருமான அஜிஸ் குரேஷி உ.பி. மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெண்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி சென்றார்.
தடையை மீறி, உரிய அனுமதி பெறாமல் பேரணி நடத்தியதாக நேற்று குரேஷி உள்ளிட்ட 7 பேர் மீது லக்னோ நகரின் கோமதி நகர் போலீஸ் நிலைய போலீசார் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.