மும்பை (04 மே 2020): மத உணர்வை காயப்படுத்தியதாக ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி ஊடகத்தில் பேசிய அர்ணாப், பந்தாரா ரெயில்வே நிலையம் அருகில் பொது மக்கள் கூடியதாக பேசிய அர்ணாப் கோஸ்வாமி அவசியமில்லாமல் ஜும்மா மசூதியை குறிப்பிட்டு பேசினார். இது மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்தது.
இதுகுறித்து கல்விச் சங்கத்தின் செயலாளர் இர்ஃபான் அபூபக்கர் சேக் மும்பை பைடோனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், “கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மசூதிகள் பூட்டப்பட்டிருக்கும் நிலையில், அர்ணாப் திரும்ப திரும்ப ஜும்மா மசூதியை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இது திட்டமிட்ட அவதூறாகும். ஒரு மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அர்ணாப் பேசியுள்ளார். அதற்கான ஊடக ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அர்ணாப் மீது போலீசார் பிரிவு 53, 153 A, 295 A, 500, 505 (2), 511 and 120 (B) ன்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.