மதுரா (02 டிச 2022): டிசம்பர் 6 அன்று மதுரா ஷாஹி ஈத்கா மசூதிக்குள் ஹனுமான் வேதம் ஓத இந்து அமைப்பினர் விடுத்த அழைப்பை அடுத்து, மதுரா நகர மாஜிஸ்திரேட் அந்த அமைப்பில் தொடர்புடைய 16 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட்களை பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம், அகில் பாரதிய இந்து மகாசபா (ABHM) அதன் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களை கிருஷ்ணரின் பிறந்த இடம் என்று நம்பப்படும் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமிக்கு அருகில் உள்ள மசூதிக்கு டிசம்பர் 6 ஆம் தேதி ஹனுமான் வேதம் ஓத வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக 16 பேர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மார்தண்ட் பிரகாஷ் சிங் கூறுகையில், எந்த அமைப்பும் இதுவரை அனுமதி கோரவில்லை என்றும், நிகழ்ச்சிக்கு கூட்டத்தை கூட்ட முயன்றதற்காக இதுவரை இருவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.