ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல் நீள்கிறது. இருந்தாலும் இந்த ப்ளூடூத் டிவைஸ்கள் இப்போது ப்ளூடூத் மூலமாகவே ஹேக் செய்யப்பட்டு சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.
எளிய பயன்பாட்டுக்காக வயர்களுக்கு விமோசனம் கொடுக்கப்போன பயனர்கள் வில்லங்கத்திற்கு ஆளாக வேண்டிய நிலையை ப்ளூடூத் ஹேக்கிங் ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ப்ளூடூத் சாதனம் ஆன் செய்யப்பட்டுள்ள பயனர்களின் சாதனங்களை ஹேக்கர்கள் அக்செஸ் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதன் வழியே செல்போன், லேப்டாப் போன்ற பயனர்களின் சாதனங்களை ப்ளூடூத் ஊடாக ஹேக் செய்து, அதில் உள்ள மிக முக்கிய தரவுகளை களவாட வாய்ப்பு உள்ளதாம். சமயங்களில் முழுவதுமாக அந்த சாதனத்தை ஹேக்கர்களால் கட்டுப்படுத்தவும் முடியும் என தெரிகிறது.
அது எப்படி பயனரின் அனுமதி இல்லாமல் ப்ளூடூத் பேர் செய்ய முடியும்?
10 மீட்டர் தொலைவில் உள்ள சாதனங்களுக்கு டிஸ்கவராகும் ப்ளூடூத் சாதனங்களை ப்ளூடூத் ஹேக்கிங் மூலம் ஹேக்கர்களால் சுலபமாக ஹேக் செய்துவிட முடியுமாம். குறிப்பிட்ட சாதனத்தை பேர் (Pair) செய்ய தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்குவார்களாம். அதன் மூலம் ஒரு கட்டத்தில் சாதனத்தை ஹேக் செய்து விடுவார்களாம். அது கோட், பாஸ்வேர்டு என அனைத்தையும் தகர்க்கும் வகையில் இருக்குமாம். அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ப்ரூட் போர்ஸாக இருக்குமாம்.
ப்ளூடூத் பேர் ஆனதும் மால்வேர்களை நிறுவி சம்பந்தப்பட்ட பயனரின் தரவுகளை தட்டி தூக்கி விடுவார்களாம். போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், கான்டக்ட்ஸ் போன்றவை இதில் அடங்கும் எனத் தெரிகிறது. சில நேரங்களில் வங்கி கணக்கு விவரங்களை கூட எடுத்து விடுவார்கள் எனத் தெரிகிறது.
ஒயர்லெஸ் சாதனங்கள், அதை போனுடன் இணைக்க உதவும் செயலிகள் போன்றவைதான் இந்த ஹேக்கிங்ற்கு பிரதான வழிகளாக அமைகிறதாம். அதனால் பயனர்கள் இந்த சாதனங்களை முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்துவது அவசியம் என சொல்லப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- ஒயர்லெஸ் சாதனங்களை பயன்படுத்தவில்லை என்றால் ப்ளூடூத்தை ஆஃப் செய்து வைப்பது அவசியம்.
- பிற சாதனங்களுக்கு ப்ளூடூத் விசிபிள் ஆவதை செட்டிங்ஸ் மூலம் தடுக்கலாம்.
சாதனங்களை அப்டேட் செய்வது மிகவும் அவசியம். - பொது வைஃபையைப் பயன்படுத்துவதில் இருந்து டிவைஸை கன்ட்ரோல் செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் பொது வைஃபை பயன்படுத்த வேண்டி வந்தால் பயன்பாட்டுக்கு பின்னர் போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
- ஒருபோதும் அறியாதவர்களின் ப்ளூடூத் பேரிங் ரெக்வொஸ்ட்களை ஏற்க வேண்டாம்.
- ப்ளூடூத்துக்கு பயனர்கள் தங்கள் பெயரை வைப்பதை தவிர்க்கலாம்.
அவ்வப்போது உங்கள் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ள ப்ளூடூத் டிவைஸ் குறித்து பார்க்கலாம். - ஆன்டிவைரஸ் செயலிகளை பயன்படுத்தலாம்
- முக்கிய தரவுகளை ப்ளூடூத் வழியே பகிர வேண்டாம்.