புதுடெல்லி (04 பிப் 2020): நாடு முழுவதும் என்.ஆர்.சியை இப்போதைக்கு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதுல் அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிக்கு தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் மக்களிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவே அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு ம் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.