சென்னை (04 பிப் 2020): ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே வாங்கலாம் என்ற சட்ட இயற்ற சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன? நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன? தனிநபர் வாங்கும் 2வது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை 2 மடங்காக உயர்த்த வேண்டும். இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் மார்ச் 6ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.