தலித் இளைஞர் முஸ்லீம் பெண் படுகொலை – கவுரவக் கொலையா?

Share this News:

பெங்களூரு (26 ஜூன் 2021): தலித் இளைஞரும் முஸ்லீம் பெண்ணும் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் சலடஹில் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பசவராஜ் மடிவலபா படிகர் என்ற தலித் இளைஞர் வசித்து வந்தார்.. இவருக்கு 18 வயதாகிறது. அதே கிராமத்தை சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற இஸ்லாமிய பெண்ணும் வசித்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இருவரும் நேற்று முன் தினம் வயல் வெளி அருகே அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

இந்நிலையில் தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்தக்கு வந்து 2 பேரின் சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளதாகவும், இருவரும் தனியாக சந்திப்பது பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததை அடுத்து பெண்ணின் தந்தை மற்றும் சிலர் காதல் ஜோடிகளை படுகொலை செய்திருக்கலாம் எனப்தாக போலீசார் சந்தேகிக்கின்றனர் .

இதற்கிடையே தலைமறைவாக உள்ள , பெண்ணின் அப்பா, அண்ணன் மற்றும் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply