பாட்னா (11 செப் 2022): பிகாரில் மஹாவீர் அகாரா பேரணியின் போது இந்துத்துவா வன்முறை கும்பலால் முஸ்லிம்கள் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளன.
பீகாரின் சிவான் மாவட்டம் பர்ஹாரியாவில் நடந்த மஹாவீர் அகாரா பேரணியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.வன்முறையின்போது முஸ்லிம்கள் வீடுகள், மற்றும் மசூதிகள் மீது வன்முறையாளர்கள் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் .
மேலும் பல வீடுகளில் கொள்ளை நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வீடுகளும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்துத்துவாவினர் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தபோது, முஸ்லிம்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் மற்றும் ஆபாசமான பாடல்களைப் பாடினர். வாள்கள் மற்றும் தடிகளை ஏந்தி அவர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
தாக்கியவர்கள் இந்துக்கள் என்பது காவல்துறையினருக்கு தெரிந்தாலும், முஸ்லிம்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு எட்டு வயது சிறுவனையும் 70 வயது முதியவரையும் மசூதியில் இருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்.
முதியவர் யாசின் சமீபத்தில் இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டவர் இன்னும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.