கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

Share this News:

புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 41,10,839 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இந்தியாவில் கொரோனா மரணங்கள் 70 ஆயிரத்தை கடந்துள்ளது.. ஒரே நாளில் 923 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 73,161. மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 31,77, 673. ஆகும்.

மேலும் உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.


Share this News:

Leave a Reply