புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன.
இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதில்லை.
இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 41,10,839 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இந்தியாவில் கொரோனா மரணங்கள் 70 ஆயிரத்தை கடந்துள்ளது.. ஒரே நாளில் 923 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 73,161. மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 31,77, 673. ஆகும்.