புதுடெல்லி (26 டிச 2022): உலகின் சிறந்த உணவுகளில் தர வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் உலகளாவிய பட்டியலில், இத்தாலி முதலிடத்தைப் பிடித்தது, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
தேவையான பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் தரவரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. ஜப்பானிய உணவு வகைகள் நான்காவது இடத்தில் உள்ளன.
டேஸ்ட்அட்லஸ் விருதுகள் 2022 முடிவுகளின்படி, இந்தியா 4.54 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும் கரம் மசாலா, நெய், வெண்ணெய் பூண்டு நான் மற்றும் கீமா உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட இந்திய உணவு வகைகளில் சிறந்த மதிப்பிடப்பட்ட உணவுகளாகும்.
Which one is your favorite?
Full top 95 list: https://t.co/194Xj0ZMZ4 pic.twitter.com/v4uYHnGzGD— TasteAtlas (@TasteAtlas) December 22, 2022
ஸ்ரீ தக்கர் போஜனலே (மும்பை), காரவல்லி (பெங்களூரு), புகாரா (புது டெல்லி), டம் புக்த் (புது டெல்லி) மற்றும் கொமோரின் (குருகிராம்) ஆகியவை 2022 ஆம் ஆண்டில் இந்திய உணவு வகைகளை முயற்சிக்க சிறந்த உணவகங்கள் என்றும் பட்டியல் கூறுகிறது.