மும்பை (26 டிச 2022): ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து தூத்தை சிபிஐ கைது செய்தது.
ஐசிஐசிஐ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டதை அடுத்து வீடியோகான் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.ஐ.சி.ஐ 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சந்தா கோச்சார் வங்கித் தலைவராக இருந்தபோது வீடியோகான் குழுமத்துக்கு வழங்கப்பட்ட 3250 கோடி ரூபாய் கடன் வழங்கினார்.
மேலும் பல சட்ட விரோதமான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுவல்லாமல் பல்வேறு நிறுவனங்களும் இந்த வழக்கில் சிக்கியுள்ளன. இதே வழக்கில் கடந்த மாதம் வேணுகோபால் துதாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.