புதுடெல்லி (19 ஏப் 2020): மருத்துவர்கள் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளக்கூடாது என்றும், மருந்து கடைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கப்படுகிறது. இதை பெரும்பாலான நாடுகள் பரிந்துரைத்து வருகின்றன. எனினும், இந்த மருந்து உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவர்களின் அறிவுரைப்படியே ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மருந்தை உட்கொள்ள வேண்டுமென மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உரிய மருத்துவரின் அறிவுறுத்தல் இன்றி இந்த மருந்தை உட்கொள்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், மருத்துவரின் அறிவுறுத்தலின் இல்லாமல் இம்மருந்தை பொதுமக்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.